தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 5 நாள்களுக்குப் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே! - மழை நிலவரம்

அடுத்த ஐந்து நாள்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain update
rain update

By

Published : Jun 12, 2021, 2:00 PM IST

சென்னை: அடுத்த ஐந்து நாள்களுக்குப் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாள்களுக்கு (ஜூன் 12 முதல் 16 வரை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய ஓரிரு மாவட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
நாளை (ஜூன் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
சோலையார் (கோவை) 2, சின்னக்கல்லார் (கோவை), அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை (கோவை), தேவலா (நீலகிரி), வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்

ஜூன் 12 முதல் 14 வரை

வடக்கு,மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 12 முதல் 15 வரை

தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்

ஜூன் 12 முதல் 16 வரை

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 12 முதல் 16 வரை

அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதையும் படிங்க: ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை

ABOUT THE AUTHOR

...view details