தெலங்கானா முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஜூன் 3) மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
ஜூன் 04: தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 05:டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள்,புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 05,07: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு :