சென்னை: வடக்கு வங்ககடல், அதனை ஒட்டிய ஒடிசா,மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (ஜூன்.11,12) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 13,14: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 15: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.