தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!
டெல்டா மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

By

Published : Jun 22, 2021, 1:20 PM IST

சென்னை: வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 22) அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

ஜூன்.23: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 24 முதல் 26 வரை:மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஜூன் 22 முதல் 26 வரை:தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க:கர்நாடக அணைகளிலிருந்து காவிரி நீர் திறப்பு

ABOUT THE AUTHOR

...view details