சென்னை:தென் கேரளாவிலிருந்து வட உள்கர்நாடகா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
02.02.2022. முதல் 05.02.2022 வரை:
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பப்ஜியால் நேர்ந்த விபரீதம்: இளைஞரின் கையை வெட்டிய முதியவர்