தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழை!

சென்னை: வெப்பசலனத்தின் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழை!
வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மழை!

By

Published : Jun 20, 2021, 1:50 PM IST

வெப்ப சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூன்.20) நீலகிரி, கோவை, தேனி, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

நாளை (ஜூன்.21) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், எஞ்சிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் சென்னை, புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜூன்.23: நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன்.24: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்:

ஜூன்.20: வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

இன்றும் நாளையும்: கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

இன்று முதல் ஜூன்.24 வரை: தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details