வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் ஆகியவற்றின் காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று (ஆக.20) 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவற்றின் காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும். உள் மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் நாளை (ஆக.21) கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.