தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By

Published : May 11, 2022, 10:55 AM IST

Updated : May 11, 2022, 11:12 AM IST

சென்னை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தீவிர புயல் அசானி என பெயரிடப்பட்டது, இந்தப் புயல் ஆந்திரா-ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அல்லது நாளை புயலாக வலுவிழக்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புயல் காரணமாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி சென்னையில் இருந்து அந்தமானிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அசானி புயல் எச்சரிக்கை எதிரொலி - 10 விமானங்கள் ரத்து

Last Updated : May 11, 2022, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details