தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பரவலாக மழை - மழை செய்திகள்

சென்னை, அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

மழை
மழை

By

Published : Jun 28, 2021, 11:40 AM IST

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஜூன் 27) தகவல் தெரிவித்தது.

சென்னையில் பரவலாக மழை

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக மிதமான மழை பெய்துவருகிறது. இந்த மழை, தகிக்கும் வெப்பத்தினைத் தணித்து சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இந்த மழை அடுத்த சில மணி நேரங்களுக்குத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details