தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடலோர மாவட்டங்களில் 4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு - வடகிழக்கு பருவமழை

சென்னை: கடலோர மாவட்டங்களில் மேலும் 4 நாள்களுக்கு மழைப்பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

METEOROLOGICAL DEPARTMENT
Rain forecast

By

Published : Jan 1, 2020, 11:00 AM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பைவிட அதிகமாக 2 விழுக்காடு மழை பெய்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 761 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில் 637 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. இது 16 விழுக்காடு குறைவாகும். 2020 புத்தாண்டு தினத்தில் அதிகாலை முதலே வளிமண்டல சுழற்சி, காற்றின் மாறுபாடு ஆகியவை காரணமாக கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யும். தமிழ்நாட்டில் இன்னும் 4 நாட்களுக்கு மழை தொடரும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பொங்கலுக்குத் தயாராகும் கரும்பு

ABOUT THE AUTHOR

...view details