தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை!

வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்சி மழை  மிதமான மழை  சென்னை வானிலை ஆய்வு மையம்  வங்கக் கடல்  rainfall  rain update  tn rain  rain  chennai news  chennai latest news
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழை!

By

Published : Jun 14, 2021, 10:09 AM IST

சென்னை: வடக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், அடுத்த மூன்று தினங்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்

எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை) மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 37, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

அரபிக்கடல் பகுதிகளான கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படிங்க: அவதூறுப் பேச்சால் பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சுவாமி அதிரடி கைது

ABOUT THE AUTHOR

...view details