தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பணியாளர் அல்லாத பெண்கள் புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி! - அரசு பணியாளர்கள்

சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அரசு பணியாளர் அல்லாத பெண்கள் அனைவருக்கும், 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும்  வரும் 23ம் தேதி முதல் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 புறநகர் ரயில்
புறநகர் ரயில்

By

Published : Nov 21, 2020, 7:04 PM IST

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பணியாளர்களாக பெண்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையும் பயணம் செய்கின்றனர்.

இந்த குறிப்பிட்ட நேரத்தைத் தவிர்த்து மீதமுள்ள நேரங்களில், அத்தியாவசியம் இல்லாத காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஞயிற்றுக்கிழமை முழுவதுமாக அனைத்து நேரங்களிலும் பெண்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது மாதாந்திர பாஸ் அல்லது தினசரி டிக்கெட்டை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்டுவந்த ரயில் சேவையில் தற்போது 40 விழுக்காடு அளவிற்கு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில்களில் அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது அரசு பணியாளர் அல்லாத பெண்கள் அனைவருக்கும், 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கும் வரும் 23ம் தேதி முதல்பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details