சென்னை விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு கொடியினை ஏற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார்.
'ரயில்வே துறை தனியார் மயமாக்கல் என்பது பொய் பிரசாரம்' - ஏ.கே. மூர்த்தி - railway should not privatised by Former Union Minister AK Murthy
சென்னை: விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், ‘ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து தனியார் துணை நிறுவனமான ஏ.டி.எஸ் நிறுவனத்திற்கு மாற்றபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், அடிப்படை வசதிகளின்றி, போதிய ஊதியம், அங்கீகாரம் கிடைக்காமலும் அவதிபட்டு வருகிறார்கள். இதனை சரிசெய்ய உரிய அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து பாமக சார்பில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை நிச்சயம் தனியார் மயமாக்கமாட்டர்கள். அது பொய்யான பரப்புரை’ என்றார்.
இதையும் படிங்க: உள்ளாடைக்குள் ஜொலித்த தங்கம்: அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள்!