சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ரயில் பெட்டிகளுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் உதிரிபாகம் தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. நேற்று (செப்.27) இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இந்த நிலையில் தீ விபத்து நடந்தபோது பணியில் இருந்த காஜாமைதீன் என்ற பாதுகாப்பு படை வீரர் இன்று (செப்.28) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அவ்வழியாக சென்ற லாரி டிரைவர் சரவணன் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.