தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2019, 3:54 PM IST

ETV Bharat / state

ரயில்வே தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சென்னை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 22ஆம் வரை நீட்டிப்பு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய ரயில்வே துறையில், மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த தேர்வு பற்றிய அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 4ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை கூடுதலாக 15 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பணிகள்: (மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு) ஜூனியர் ஸ்டெனேகிராஃபர்

சட்ட உதவியாளர் தலைமை சமையற்காரர் / சமையற்காரர் உள்ளிட்ட 30 வெவ்வேறு பணிகள்

காலிப்பணியிடங்கள் மொத்தம் = 1,665 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி: 23.02.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2019

ஆன்லைன் மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள்: 28.04.2019

ABOUT THE AUTHOR

...view details