சென்னை, ஆவடி அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் தினேஷ்பாபு (38). இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றினார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். தினேஷ் பாபுவிற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தினேஷ்பாபு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர் வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த நந்தினி மற்றும் சகோதரர் அரவிந்த் ஆகியோர் தினேஷ் பாபுவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.