தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகராட்சியின் பணிக்கு ரயில்வே கோட்டம் நன்றி... - சென்னை ரயில் கோட்டம்

மழைக்காலங்களில் எழும்பூர் ரயில் நிலையத்தில் வழக்கமாக மழைநீர் தேங்கும் நிலையில், இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை என சென்னை மாநகராட்சியின் பணிக்கு சென்னை ரயில் கோட்டம் நன்றி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் பணிக்கு ரயில்வே கோட்டம் நன்றி
சென்னை மாநகராட்சியின் பணிக்கு ரயில்வே கோட்டம் நன்றி

By

Published : Nov 2, 2022, 1:20 PM IST

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெய்யும் மழைநீர் எழும்பூர் ஆன்ட்ரூஸ் தேவாலயத்தை கடந்து எழும்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளப்பகுதியை வந்தடையும். இதன் காரணமாக மழை நாட்களில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ரயில்கள் அனைத்தும் வேகம் குறைத்து இயக்கப்படும்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுக்கு இடையே ரயில் தண்டவாளப் பகுதி அமைந்துள்ளதால் பள்ளம் தோண்டி இணைப்பு கால்வாய் ஏற்படுத்துவது சவாலாக இருந்தது. எனவே சென்னை மாநகராட்சி மூலம் நவீன துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி ஆண்ட்ரூஸ் சாலை முதல் கூவம் ஆறு வரை தரைக்கு அடியில் துளையிட்டு குழாய்களை பதித்தனர்.

சென்னை மாநகராட்சியின் பணிக்கு ரயில்வே கோட்டம் நன்றி தெரிவித்துள்ளது

இப்பணி கடந்த வாரம் முடிவுற்ற நிலையில் இம்முறை எழும்பூர் ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் இந்த ஆண்டில் எழும்பூர் ரயில் நிலையம் வழியில் பயணிக்கும் அனைத்து ரயில்களும் வழக்கமான வேகத்தில் இயக்கப்படுவதாக சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது. இதற்கு மாநகராட்சிக்கு இரயில்வே நிர்வாகம் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் மிகப்பெரிய அளவில் மழை பெய்தாலும் பாதிப்புகள் குறைவுதான்.. மா.சுப்ரமணியன்

ABOUT THE AUTHOR

...view details