கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், கரோனா அறிகுறி இருப்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கும் சிறப்பு இடங்கள் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே சார்பாக ரயில் பெட்டிகளை சிகிச்சை வார்டாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 20 ஆயிரம் கொரோனா ரயில் பெட்டிகளை சிகிச்சை பெட்டிகளாக மாற்ற இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது இதன்மூலம் 3.2 லட்சம் நோயாளிகளை படுக்கை வசதி கிடைக்கும். முதற்கட்டமாக 5 ஆயிரம் பெட்டிகளை மாற்றியமைக்கப்படுகிறது.