சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்கத் தான் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.
ரஜினியோடு கூட்டு சேர்கிறாரா கருணாநிதியின் மகன்? - MK AZHAGIRI
அரசியலில் களமிறங்கவுள்ள நடிகர் ரஜினியோடு கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி கூட்டுசேருவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தொடங்க இருக்கப்படும் தனது கட்சியை பலப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களை தனது கட்சியில் இணைக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி, ரஜினியின் வேண்டுகோளை ஏற்று அவர் தொடங்க இருக்கும் புதிய கட்சியில் இணைந்து செயலாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கிய பிரமுகர்களை இணைக்கும் முயற்சியில் நடிகர் ரஜினி தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.