சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50 வது பிறந்த நாளையொட்டி இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி இன்று (ஜூன்.19) மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். காங்கிரஸ் கமிட்டி சார்பில் 100 பேருக்கு நிவாரணப் பொருட்கள் தொகுப்பு, நிதியுதவி அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் கமிட்டி மருத்துவ அணித் தலைவர் எம்பி கலீல் ரகுமான் வழிகாட்டுதல்படி 100 பேருக்கு கோவிட்-19 உயிர் காக்கும் மருந்து தொகுப்பு வழங்கப்பட்டது.
இதேபோல மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம் பி ரஞ்சன் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் கே. எம் இக்பால் அகமது ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், டிஜிட்டல் தெர்மாமீட்டர், ஆக்சி மீட்டர், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தொகுப்பு தமிழ்நாடு மருத்துவ இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி பிறந்த நாள் - நலத்திட்ட உதவிகள் தொடர்பாக ஆலோசனை