தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சீமான் குறித்து பேச விரும்பவில்லை’ - ராகவா லாரன்ஸ்! - சீமான்

சென்னை: மக்கள் அனைவரும் தங்கள் மனதுக்கு பிடித்த சரியான நபருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், சீமான் குறித்து பேச விரும்பவில்லை எனவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

raghava lawrence

By

Published : Apr 18, 2019, 2:06 PM IST

தமிழ்நாட்டில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

ராகவா லாரன்ஸ் பேட்டி

அந்த வகையில், சென்னையில் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்த நடிகர் ராகவா லாரன்ஸ், “நிறைய பேர் எதுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நமக்கு நல்லது நடக்கணும், தண்ணீர் கிடைக்கணும், நம்ம எல்லாரும் கஷ்டம் இல்லாம இருக்கனும், அதுக்காம நாம் வாக்களிக்க வேண்டும். மனதிற்கு பிடித்த நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

அதன்பின், சீமானுடன் ஏற்பட்ட முரண்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், அதுகுறித்து தற்போது பேச விரும்பவில்லை எனவும் பதிலளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details