தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஸ்ரீ ராகவேந்திரர் சிலை..! ராகவா லாரன்ஸ் - Chennai District News

நடிகர் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய ஸ்ரீ ராகவேந்திரர் சிலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

என்று நடிகர் ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி
இந்தியாவிலே மிகப்பெரிய ஸ்ரீ ராகவேந்திரர் சிலை.!

By

Published : Oct 29, 2021, 8:28 AM IST

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் வணக்கம்! இன்று வியாழக்கிழமை என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாள். இந்தியாவில் முதன்முறையாக 15 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட ராகவேந்திர சுவாமியின் பளிங்கு சிலையை இன்று பிரதிஷ்டை செய்துள்ளேன்.

இந்த நற்செய்தியை, உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சாதாரண மனிதனாக இருந்த என்னை இந்த உயரத்துக்கு அடையாளம் காட்டியது, அந்த ராகவேந்திர சுவாமியின் அருள் தான் என்று இன்றுவரை நம்புகிறேன்.

இத்தருணத்தில், ராகவேந்திர சுவாமியின் மிகப்பெரிய சிலையை உருவாக்குவதே எனது கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! எனது ரசிகர்கள் மற்றும் அனைத்து ராகவேந்திரர் பக்தர்களுக்கும் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்! குருவே சரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் அர்ஜுன், சென்னையில் பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோயில் ஒன்றைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: 17 ஆண்டு கனவு: 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை உருவாக்கிய அர்ஜுன்

ABOUT THE AUTHOR

...view details