நடிகர் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே, சத்யராஜ், சச்சின் கெடேகர், பிரியதர்சி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா செத்ரி, சத்யன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. பிரபாஸின் பிறந்தநாளான அக்.23 இப்படத்தின் டீஸர் வெளியானது. இயக்குநர் ராதா கிருஷ்ண் குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியானது.
கைரேகை நிபுணராக நடித்துள்ள பிரபாஸ் தன்னுடைய ரகசிய சக்தி வைத்துக் கடந்த காலத்தில் நிகழும் சம்பவங்களையும் கடந்த கால காதல் குறித்தும் தெரிந்துகொள்கிறார். அதன் மூலம், அவர் சந்திக்கும் நிகழ்வுகள் என்ன என்பதே படத்தின் கதை விவரிக்கிறது. வெளியாகிய நாள் முதலே நல்ல வரவேற்பை பார்வையாளர்களிடம் பெற்றது.