சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் குழந்தை சுஜித் உடல் மீட்பு குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சுஜித் உயிரிழப்பு குறித்து தவறான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. இறந்த உடலை மீட்பதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள்தான் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன.
களத்தில் 600க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மிக வேதனையுடன் தான் அவர்கள் அங்கே பணியாற்றி இருக்கின்றனர். ஒவ்வொரு நொடியும் உயிருடன் குழந்தையை மீட்க வேண்டும் என்று தான் பணியில் ஈடுபட்டோம்.