தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈபிஎஸ்ஸை சந்தித்த பின் ஓபிஎஸ்ஸுக்கு ஆர்.பி.உதயகுமார் சொன்ன மெசேஜ்... - ஈபிஎஸ்சை ஆதரிக்கும் தீர்மானத்தை ஓபிஎஸ் வழி மொழியை வேண்டும்

ஓபிஎஸ்ஸை யாரும் ஓரம் கட்ட மாட்டோம்; தொண்டர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் தீர்மானத்தை ஓ.பன்னீர் செல்வம் வழி மொழிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் யாரும் ஓரம் கட்ட மாட்டோம்.. ஈபிஎஸ்சை ஆதரிக்கும் தீர்மானத்தை ஓபிஎஸ் வழி மொழியை வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் சொன்ன மெசேஜ்
ஓபிஎஸ் யாரும் ஓரம் கட்ட மாட்டோம்.. ஈபிஎஸ்சை ஆதரிக்கும் தீர்மானத்தை ஓபிஎஸ் வழி மொழியை வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் சொன்ன மெசேஜ்

By

Published : Jun 21, 2022, 3:26 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக மாவட்டச்செயலாளர்கள் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தித் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு தனித்தனியாக ஆதரவாளர்கள் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் இல்லத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார். அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஓ. பன்னீர்செல்வம் அரசியலில் யாருக்கும் துரோகம் செய்யாதவர்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆர்.பி.உதயகுமார் சொன்ன மெசேஜ்...

இரட்டைத் தலைவர்களின் செயல்பட்டால் மாவட்டச் செயலாளர்களின் களப்பணி பாதிக்கப்படுகிறது. எனவே, ஒற்றைத் தலைமை அவசியமாக இருக்கிறது. ஓபிஎஸ்ஸை யாரும் ஓரம் கட்ட மாட்டோம். தொண்டர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் தீர்மானத்தை ஓ.பன்னீர் செல்வம் வழி மொழிய வேண்டும்.

ஈபிஎஸ்ஸை சந்தித்த பின் ஓபிஎஸ்ஸுக்கு ஆர்.பி.உதயகுமார் சொன்ன மெசேஜ்...

அதிமுகவில் 99 விழுக்காடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஜெயலலிதா கொடுத்த உழைப்பை எடப்பாடி பழனிசாமி தருவார் என நம்பிக்கை வைத்து அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆதரவாக இருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் ஆதரவு.. இன்று ஈபிஎஸ் ஆதரவு - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட விருதுநகர் மா.செ

ABOUT THE AUTHOR

...view details