தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'குயின்' இணையதள தொடர் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தத் தொடருக்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
'குயின்' தொடருக்கு மீண்டும் சிக்கல்! - Gautham Menon
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 'குயின்' இணையதள தொடருக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடைவிதித்திருந்தது. அதேபோல், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 'குயின்' இணையதள தொடரையும் வெளியிட தடைவிதிக்க வேண்டும். இது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தலைவி படத்திற்கும் குயின் தொடருக்கும் தடைவிதிக்க ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் குயின் தொடரை வெளியிட உயர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'குயின்' இணையதளத் தொடருக்கும், 'தலைவி' திரைப்படத்துக்கும் தடையில்லை!