சென்னை: குடியிருப்புச் சங்கங்கள் வசூலிக்கும் மாத சந்தா தொகை ஏழாயிரத்து 500 ரூபாய் வரை இருந்தால், அதற்கு ஜிஎஸ்டி செலுத்த வரி விலக்கு உண்டு எனவும், சந்தா தொகை ஏழாயிரத்து 500 ரூபாய்க்கு மேலிருந்தால், வித்தியாசத் தொகைக்கான ஜிஎஸ்டி தொகையைச் செலுத்துவதற்குப் பதிலாக முழுமையான தொகைக்கும் வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி (ஏஆர்ஏ - அட்வான்ஸ் ரூலிங் அதாரிட்டி) ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை ரத்துசெய்யக் கோரி டி.வி.ஹெச். லும்பினி குடியிருப்புச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் மனு தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது குடியிருப்புச் சங்கங்களுக்குச் சாதகமாகக் கருத்து தெரிவித்த அரசு, பின்னர் தனது கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது எனக் கூறினார்.
ஜிஎஸ்டி ஆணைய உத்தரவு ரத்து: குடியிருப்புச் சங்கங்கள் மகிழ்ச்சி - chennai court news
குடியிருப்புச் சங்கங்கள் வசூலிக்கும் சந்தா தொகை ஏழாயிரத்து 500 ரூபாய்க்கு மேலிருந்தால் முழுமையான வரி செலுத்த வேண்டும் என்ற ஜிஎஸ்டி ஆணைய உத்தரவை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Quashed gst council subscription notification, MHC order
மேலும், சந்தா தொகை ஏழாயிரத்து 500 ரூபாய்க்கு மேலிருந்தால் முழுமையான ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஜிஎஸ்டி (ஏஆர்ஏ - அட்வான்ஸ் ரூலிங் அதாரிட்டி) ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜூலை 16இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!