கடந்த சில வாரங்களாக சென்னையின் சுற்றுவட்டாரங்களில் பெய்த கன மழையினால் மெட்ரோ எரிகளான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம், சோழவரம், செங்குன்றம் ஏரிகளில் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேலும் பூண்டி ஏரிக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து நீர் தொடர்ந்துவருவதால் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியது. எனவே பொதுப்பணித் துறை அலுவலர்கள் இரண்டு நாள்களுக்கு முன்பு உபரிநீரை வெளியேற்றினர்.
ஏரிகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்பு
மெட்ரோ ஏரிகளின் மொத்த நீர் இருப்பின் கொள்ளளவு 11 ஆயிரத்து 757 மில்லியன் கியூபிக் அடியாகும். தற்போது ஏரிகளின் நீர் இருப்பு ஒன்பதாயிரத்து 658 மில்லியன் கியூபிக் அடியாக உள்ளது. மேலும் இந்த மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கி கனமழை பெய்தால் ஏரிகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பொதுப்பணித் துறை மெட்ரோ ஏரிகளைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறது" எனப் பொதுப்பணித் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். மேலும் உபரிநீரை எந்த ஏரிகளிலிருந்து வெளியேற்றலாம் என்பதைப் பொதுப்பணித் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை முடிவுசெய்யும் என்றும் கூறினார்.
மற்றொரு அலுவலர் கூறுகையில், "அனைத்து மெட்ரோ ஏரிகளிலும் ஏற்கனவே பராமரிப்புப் பணிகள் குறிப்பாக தூர்வாருதல், கரையைப் பலப்படுத்தும் பணிகள் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டுள்ளன.