மணலுக்கு மாற்றாக ’எம் - சாண்ட்’ பயன்படுத்த தமிழ்நாடு அரசு ஊக்குவித்துவருகிறது. விபத்துகளை தவிர்ப்பதற்காக ஒரிஜினல் எம் சாண்ட் குவாரிகளுக்கு மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இதுவரை 216 குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு, மதிப்பீடு செய்யப்பட்ட குவாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது.
அதில், ”முதலமைச்சரின் உத்தரவின் பேரில் எம் - சாண்டு குவாரிகளுக்கு கடிதம் எழுதி மதிப்பீடு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த குவாரிகளில் பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து ’எம் - சாண்டை’ ஒன்பது துறை நிபுணர்கள் அடங்கிய குழு பரிசோதித்த பின்னரே மதிப்பீட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.