தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி - கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் வெள்ளம்

புழல் ஏரி முழு கொள்ளவை எட்டியதை தொடர்ந்து, சுமார் 3 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி
முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி

By

Published : Jan 1, 2022, 10:10 PM IST

சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் பல இடங்களில் மழைநீர் புகுந்தது. தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான சோழவரம், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை பதிவான நிலையில் புழல் ஏரி அதன் முழு கொள்ளளவான 21.20 அடி அளவில் தற்போது 21.19 அடி வரை நீர் நிரம்பியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் நாளிலேயே தன்னுடைய முழு கொள்ளளவையும் புழல் ஏரி எட்டியுள்ளது. மேலும் ஏரிக்கு நீர்வரத்து 2500 கன அடி இருப்பதால் கடந்த 2 நாட்களாக 750 கன அடி, 1500 கன அடி என நீர் திறக்கப்பட்டு தற்போது 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் புழல் ஏரியில் இருந்து எண்ணூர் முகத்துவாரத்திற்கு செல்லும் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. 3000 கன அடி நீர் செல்வதால் ஆற்றுபாதையான, மாதவரம் வடபெரும்பாக்கம், மணலி நெடுஞ்செழியன் நகர், திருவொற்றியூர் சடையன்குப்பம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வெள்ள அபாய பகுதிகள்

நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டால் பக்கிம்காம் கால்வாயின் கரையை தாண்டி கால்வாயில் வெள்ளநீர் புகும்பட்சத்தில் கால்வாயை ஒட்டியுள்ள திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

கடந்த வடகிழக்கு பருவமழையின் போது புழல் ஏரியில் இருந்து 9 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அதே சமயத்தில் பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் பூண்டி கொசஸ்தலையில் வெள்ளம் ஏற்பட்டு மணலி, மணலி புதுநகர் போன்ற பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி

தற்போது பூண்டியில் 1000 கன அடிக்கும் குறைவாக நீர் திறக்கப்பட்டிருப்பதாலும், புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலையில் மாதவரம், மணலி, திருவொற்றியூர் மற்றும் பக்கிங்காம் கால்வாயின் கால்வாய் செல்லும் பகுதிகளான கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகும் வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க;அதிரடிப்படை நிலை என்ன?- சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details