தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினுக்கு கிருஷ்ணசாமி வாழ்த்து - Dmk leader stalin

சென்னை: முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த புதிய தமிழகம் கட்சி தலைவர்!
ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த புதிய தமிழகம் கட்சி தலைவர்!

By

Published : May 4, 2021, 2:33 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கரோனா பெருந்தொற்று சவாலாக உள்ள நேரத்தில் வரும் மே 07 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். திமுக பல்வேறு விதமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. பதவி ஏற்றவுடன் கரோனா பெருந்தொற்றிலிருந்து தமிழக மக்களை விடுவிக்கவும் தமிழக மக்கள் மீதான பல்வேறு பொருளாதார, சமூக சுமைகளை குறைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசின் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு புதிய தமிழகம் கட்சி திறந்த மனப்பான்மையுடன் துணைநிற்கும். இந்த தேர்தல் முடிவுகள், புதிய தமிழகம் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை கோவை பொதிகை இல்லத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details