சென்னை: புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கிருஷ்ணசாமி, “புதிய தமிழகம் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் எனவும், இரவு நேரங்களில் மது விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும் பேரணி நடைபெற உள்ளது.
இந்த பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்க உள்ளது. பேரணி முடிந்த பிறகு ஆளுநரை சந்தித்து, திமுக தேர்தலுக்கு அளித்த வாக்குறுதியை குறித்து மனு ஒன்றை அளிக்க உள்ளோம். இந்த பேரணிக்கு திமுக தவிர அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து உள்ளோம். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளோம்.
ஆளுநர் ஆளும் கட்சி பற்றி குற்றம் சாட்டும்போது, அதை எளிதாக கடந்து விட முடியாது. அவர் எழுப்பிய கேள்விக்கு ஏன் பத்திரிகையை அழைத்து முதலமைச்சர் இன்னும் பேசவில்லை? வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும்.