பொறியியல் படிப்பில் சேருவதற்கு இதுவரை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் எனவும், மாணவர்கள் செல்போன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான வசதிகளும் இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்தார்.
பொறியியல் படிப்பில் சேர 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்!
சென்னை: பொறியியல் படிப்பில் சேர 80 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "2020-21 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மாணவர்கள் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். எனவே அவசரப்படாமல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களைக் படித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களின் செல்போன் மூலம் விண்ணப்பம் செய்யும் வகையில் ஆன்லைன் விண்ணப்பத்தில் வசதியினை ஏற்படுத்தியுள்ளோம். கோவிட்-19இன் காரணமாக தங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களுக்கு சென்று அங்கேயே அவர்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க: மறுகூட்டல், மறு மதிப்பீடு அறிவிப்பில் காலதாமதம் - கலக்கத்தில் மாணவர்கள்
TAGGED:
பொறியியல் மாணவர் சேர்க்கை