சென்னை:கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார்.
தமிழக புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பு ஏற்க பன்வாரிலால் புரோகித் இன்று(செப்.14) காலை சென்னையில் இருந்து பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
அவரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். மேலும் தமிழ்நாடு புதிய ஆளுநராக பதவியேற்கவுள்ள ஆர்.என்.ரவி வரும் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு சென்னைக்கு வருகிறார்.
இதையும் படிங்க:மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு