தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய பொருள்கள் கொள்முதல் செய்வதற்கான தடை நீக்கம் - undefined

சென்னை: 144 தடை காலத்தில் விவசாய பொருள்கள் கொள்முதல் செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

purchase-of-agricultural-commodities-tamil-nadu-government
purchase-of-agricultural-commodities-tamil-nadu-government

By

Published : Mar 29, 2020, 1:14 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யப்படும் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்துக் கடைகளையும், நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கால்நடைகளுக்கான உரங்கள் பெருவதில் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் அடுத்தடுத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அரசாணை

இதையடுத்து, தமிழ்நாடு அரசு சில பணிகள் நடைபெறுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதாக அறிவித்துள்ளது. அதில், விவசாய பொருள்கள் கொள்முதல் நிறுவனங்கள், விவசாய விளைபொருள்கள் சந்தைக்குழு நடத்தும் மண்டிகள், உர விற்பனை நிலையங்கள், விவசாய பணிகள், விவசாய கூலிப்பணிகள், விவசாய இயந்திர வாடகை மையங்கள், உரம், விதைகள், பூச்சிக்கொல்லி தயாரிப்பு, பேக்கிங் நிறுவனங்கள், மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான தோட்டக்கலை சார்ந்த இயந்திரங்களின் இயக்கங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 144 தடையை மீறி விற்கப்பட்ட 47 மதுபாட்டில்கள் பறிமுதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details