சென்னை:சில நாட்களாக சென்னையில் பரவலாக நல்லமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பூக்கடை காவல் நிலையம் பின்புறம் உள்ள பேருந்து நிலைய நிழற்குடையில் காவல் நிலைய எழுத்தர் கல்யாணசுந்தரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மழை சிறிது அதிகமாக பெய்துள்ளது.
சூதாரித்த காவலர்
அப்போது நாய் ஒன்று 4 குட்டிகளுடன் நிழற்குடையினுள் வந்து நின்றுள்ளது. இந்நிலையில், நாய்க்குட்டிகளில் ஒன்று பேருந்து நிலைய நிழற்குடையின் தரைத்தளத்தில் மின்சார கேபிள்கள் செல்லும் பைப்புகளின் மீது ஏறி உள்ளது.
அப்போது நாய் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளது. இதை அறியாமல் எழுத்தர் கல்யாணசுந்தரம் நாய்க் குட்டியைத் தூக்கியுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இருப்பினும், பெரும் பாதிப்பு இல்லாமல் கல்யாணசுந்தரம் உயிர் தப்பினார்.