தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் ஆம்புலன்ஸ்: முதலமைச்சரிடம் வழங்கல் - TN CM Palanisamy

சென்னை: தமிழ்நாடு அரசின் பயன்பாட்டிற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

cm
cm

By

Published : Oct 6, 2020, 7:24 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மல்லிகார்ஜுன ராவ் சந்தித்தார்.

அப்போது, தமிழ்நாடு அரசின் பயன்பாட்டிற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியின் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனத்தை மல்லிகார்ஜுன ராவ் வழங்கினார்.

இந்நிகழ்வில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பினோத் குமார், சென்னை வட்டத்தின் தலைவர் முகமது மக்சூத் அலி, துணைப் பொதுமேலாளர் நாகேஸ்வர ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் மற்றொரு நிகழ்வில், முதலமைச்சர் பழனிசாமியை ஜி.ஜி. மருத்துவமனையின் (Fertility & Women's Speciality Centre) நிறுவன இயக்குநர் மற்றும் தலைவர் மருத்துவர் கமலா செல்வராஜ் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

உடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, ஜி.ஜி. மருத்துவமனையின் உதவி இயக்குநர் மருத்துவர் தீபு ராஜ்கமல் செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details