சென்னை புளியந்தோப்பு (திரு.வி.க மண்டலம்) பெரியார் நகரை சேர்ந்த சேக் அப்துல் என்பவரின் மனைவி அலிமா(35). இவர் நாராயணசாமி தெருவில் சாஜிதா பேகம் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.
இதையடுத்து வழக்கம்போல் நேற்று காலை (செப். 14) அவரது வீட்டுக்கு சென்றபோது, தெருவில் மழைநீர் தேங்கி இருந்த காரணத்தால் ஓரமான பகுதியில் நடந்து சென்றார்.
அவர் சென்ற பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு, அங்கு தேங்கியிருந்த நீரிலும், ஈரமான தரையிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாமல் நடந்து சென்ற அலிமா, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விதமான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தன. கடந்த ஒரு வார காலமாக இந்த மின் கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டும், எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டி இருந்தனர்.