ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி முதலமைச்சருக்கு புகழேந்தி கடிதம் - ops

கரோனா தொற்று காரணமாக அதிமுகவின் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக்கோரி முதலமைச்சருக்கு புகழேந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி முதலமைச்சருக்கு புகழேந்தி கடிதம்
அதிமுகவின் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி முதலமைச்சருக்கு புகழேந்தி கடிதம்
author img

By

Published : Jun 29, 2022, 7:45 PM IST

சென்னை: பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் புகழேந்தி சந்தித்தார்.

சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, "ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவிற்கு கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர், தலைமைச்செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் ஒரு கட்சியின் விவகாரம் பெரிதல்ல.

ஜெயலலிதாவால் அவைத்தலைவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர் தான் ஜெயக்குமார். தென் மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்தின் கூட இருந்தே குழி பறித்தவர் ஆர்.பி.உதயகுமார்.

தேர்தல் நேரத்தில் 10.5% இடஒதுக்கீடு தற்காலிக அறிவிப்பு எனக் கூறி ஆர்.பி.உதயகுமார் பரப்புரை மேற்கொண்டார். கடற்கரை அருகே பொதுக்குழுவை நடத்தி தொண்டர்களை கடலில் தள்ள சி.வி.சண்முகம் முயற்சி செய்கிறாரா?", எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:குமரி சிறுவன் இறந்த விவகாரம்;பினராயி விஜயன் ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதம் - திகைத்துப்போன போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details