தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எதிர்க்கட்சி தலைவரே அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்திருக்கக்கூடாது' - AIADMK

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பொறுப்பிலிருந்துகொண்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தவிர்த்தது ஒரு பொறுப்பற்ற செயல் என்று ஈபிஎஸ் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 13, 2022, 7:57 PM IST

சென்னை:மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று (நவ.13) மலர்த்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், 'முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் ஒரு நல்ல அதிகாரி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த 2019 ஜூலை 24ஆம் தேதி பொன்மாணிக்கவேல், இரண்டு அமைச்சர்களுக்கு சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

பொன் மாணிக்கவேலை நான் அரசியலுக்கு அழைக்கவில்லை. சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய இரண்டு அமைச்சர்கள் யார்? என்பதை பொன்மாணிக்கவேல் வெளியே கூறவேண்டும்.

அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கொடநாடு வழக்கில் தொடர்பு இருப்பதுபோல, சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகவும் பல வேலைகளை செய்துள்ளனர். பழனிசாமிக்கு இதில் என்ன தொடர்பு? இதுபோன்ற இன்னும் எந்தெந்த குற்றச் சம்பவங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்பது போகபோகத்தான் தெரியும்' என்றார்.

தற்போது சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜியாக இருப்பவர். இதில் தொடர்புடைய இரண்டு அமைச்சர்கள் யார் என்பதை பொன்மாணிக்கவேல் அவர்களிடம் கேட்டறிந்து தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறினார்.

எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை, பழனிசாமி தவிர்ப்பது ஒரு பொறுப்பு உடையவர்போல் இல்லை எனவும்; அனைத்து கட்சி கூட்டத்திற்கு எந்த அழைப்பும் வராததால் தாங்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறினார்.

மேலும், ‘முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கு மதிக்கிறோம்; ஓட்டு போட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் நான் முதலமைச்சர் தான் என்று சொன்ன முதலமைச்சர் காலையில் சென்று ஆய்வு செய்து இருக்கிறார். பணிகள் நடக்கிறது. நாம் கண்ணால் பார்க்கிறோம். அதிலே, குறைக் காண முடியாது எனவும் விலைவாசி ஏற்றத்திற்கு எங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தாலும், இந்தப் பணிகளை அவர்கள் தொடரும்போது அதைப் பாராட்டுகிறோம்.

ஆனால், என்னுடைய பிரச்னை என்ன? என்று கேட்டால் 'ஸ்மார்ட் சிட்டி' அமைப்பதாகக் கூறி, ரூ.1,000 கோடி கொள்ளை அடிக்கப்பட்டதை விசாரணை செய்வதாக முதலமைச்சர் கூறினார். பின்னர் ஏன்? வேடிக்கை பார்க்கிறார். எங்கே விசாரணை கமிஷன் என கேள்வி எழுப்பியதோடு பார்க்க இதை வேடிக்கையாக இருப்பதாகவும்’ அவர் கூறினார்.

இதையும் படிங்க:எரிந்த புதைவட மின்சார கேபிள் - அச்சத்தில் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details