தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான புதுக்கோட்டை மீனவர்கள் சென்னை வருகை! - புதுக்கோட்டை மீனவர்கள் சென்னை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேர், விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Pudukkottai
Pudukkottai

By

Published : Dec 23, 2022, 4:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த 24 மீனவர்கள், ஐந்து படகுகளில் கடந்த மாதம் 18ஆம் தேதி நள்ளிரவில் புதுக்கோட்டை கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக்கூறி மீனவர்களைக் கைது செய்தனர். படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதங்கள் எழுதினார்.

இதையடுத்து, இலங்கை நீதிமன்றம் இம்மாதம் கடந்த 17ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன்படி விடுதலை செய்யப்பட்ட 24 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தூதரகப் பராமரிப்பில் இருந்த மீனவர்கள் இன்று(டிச.23) கொழும்பிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தனர். மீனவர்களை வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்களை வேன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை ஏரியா சபைகளின் விவரம் இணையதளத்தில் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details