புதுச்சேரி: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
புதுச்சேரியை பொறுத்தவரை நேற்று (ஜூலை 6) ரூ.100-ஐ தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.
மோடி முகமூடி அணிந்து போராட்டம்
இதனைக் கண்டிக்கும் வகையில் புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி உருவம் கொண்ட முகமூடி அணிந்து சைக்கிள் டயரை சாலையில் ஓட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
சைக்கிள் டயர் ஓட்டி நூதனப் போராட்டம் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டதால் காவல்துறையினர் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர், இதையடுத்து மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் - டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி