தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை! - Puducherry Siddhar Temple Money Theft

புதுச்சேரி: பிரசித்திப் பெற்ற தேங்காய் சித்தர் கோயில் உண்டியலை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சித்தர் கோயில்  புதுச்சேரி சித்தர் கோயில் உண்டியல் உடைப்பு  உண்டியல் உடைப்பு  Puducherry Siddhar Temple  Pondicherry Siddharth Temple Bill Breaking  Puducherry Siddhar temple temple bill broken and money robbed  Temple dump box
Puducherry Siddhar temple temple bill broken and money robbed

By

Published : Apr 12, 2021, 9:02 AM IST

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த சுல்தான்பேட்டையில் மிகவும் பிரசித்திப் பெற்ற தேங்காய் சித்தர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் உண்டியல் பல மாதங்களாகத் திறக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இக்கோயிலின் உண்டியலை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து வில்லியனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

இதேபோல், அரும்பார்த்தபுரம் செங்கழுநீர் அம்மன் கோயில் உண்டியலை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கோயில் உண்டியலை உடைக்கும் அடையாளம் தெரியாத நபர்

இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள இரு வேறு கோயில்களில் அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கோயில் உண்டியல் உடைப்பு: பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details