தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் உணவு கிடைக்கவில்லை எனப் புகார்: விரைந்து உதவிய தமிழிசை! - ரயில் பயணிக்கு உதவிய தமிழிசை சௌந்தரராஜன்

குடும்பத்துடன் ரயிலில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர், சைவ உணவு கிடைக்கவில்லை என்றும்; ரயிலில் மோசமான பராமரிப்பு உள்ளது என்றும் முகநூல் பதிவிட்ட நிலையில், அவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக உதவி செய்துள்ளார்.

தமிழிசை
தமிழிசை

By

Published : May 26, 2022, 9:46 PM IST

சாய் ஸ்ரீ ஐயர் ஸ்ரீதரன் என்பவர் குடும்பத்துடன் 10 நாள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டார். பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 23ஆம் தேதி காமாக்யாவிலிருந்து இருந்து சென்னை வரை காமாக்யா-பெங்களூரு (12510) ரயிலில் புறப்பட்டுள்ளார். அப்போது, ரயிலில் முறையான பராமரிப்பு இல்லை என்றும்; சைவ உணவு கிடைக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

அவர் தனது முகநூல் பதிவில், "குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளோம். ரயிலில் முறையான பராமரிப்பு இல்லை, சைவ உணவு கிடைக்கவில்லை. சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். வயதான பெண்கள் உள்ளனர். உணவு இல்லாமல் தண்ணீர் மட்டும் குடித்து வருகிறோம். மொழி பிரச்னை உள்ளது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக உதவி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையறிந்த தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலர்களிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து, பயணி ஸ்ரீதரனை அலுவலர்கள் தொடர்பு கொண்டு தகுந்த உதவி செய்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஸ்ரீதரன், தமிழிசை சௌந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஒருபுறம் பாரத் மாதா கி ஜெ... மறுபுறம் கலைஞர் வாழ்க..!' - திக்குமுக்காடிய நேரு அரங்கம்!

ABOUT THE AUTHOR

...view details