தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும் - தமிழிசை - Tamilasai Soundarajan Press Meet

புதுச்சேரி: ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தர்ராஜன்  தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர் சந்திப்பு  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்  Tamilasai Soundarajan  Tamilasai Soundarajan Press Meet  Puducherry Deputy Governor Tamilisai Saundarajan
Tamilasai Soundarajan Press Meet

By

Published : Feb 18, 2021, 10:45 AM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்குத் துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளேன். புதுச்சேரி, தமிழ்நாடு மக்களின் ஆசியாலும் தெலங்கானா மக்களின் அன்பாலும் நான் இங்கு வந்துள்ளேன்.

தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. இன்று தமிழில் உறுதிமொழி எடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒன்றரை ஆண்டுகளாக தெலங்கானா ஆளுநராகச் சிறப்பாகச் செயல்பட்டேன். தெலங்கானவில் ராஜ்பவன் மக்களுக்கான பவனாக உள்ளது, அதுபோல் புதுச்சேரியிலும் தொடரும்.

ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். முதலமைச்சரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும். மக்களின் நலனுக்காகச் செயல்படுவேன். ஆளுநராக இல்லாமல் சகோதரியாக இருப்பேன்.

அரசியல் அமைப்பிற்குள்பட்டு முடிவு எடுப்பேன். ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க:பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழல்: துணைநிலை ஆளுநர் பதவியேற்கிறார் தமிழிசை

ABOUT THE AUTHOR

...view details