தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15வது நிதி கமிஷனில் புதுச்சேரி, டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது - நாராயணசாமி பேட்டி

சென்னை: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, "கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் 15வது நிதி கமிஷனில் புதுச்சேரி, டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி - செய்தியாளர்கள் சந்திப்பு

By

Published : Sep 21, 2019, 7:49 PM IST

கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் புதுச்சேரி மாநில பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறினார்..

மத்திய நிதி கமிஷனில் 29 மாநிலங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. யூனியன் பிரதேசங்களுக்கும் நிதி கமிஷன் உள்ளது. ஆனால் புதுச்சேரி, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கென்று நிதி கமிஷன் இல்லை. மத்திய அரசானது வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு 42 விழுக்காடும் யூனியன் பிரதேசங்களுக்கு 90 விழுக்காடும் பிரித்து கொடுக்கிறது. ஆனால் புதுச்சேரிக்கு ஒதுக்கிய 26 விழுக்காடு வரியை 42 விழுக்காடாக உயர்த்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

மேலும் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை நிதி கமிஷனில் இணைக்க அனுமதிக்கப்பட்டது போல புதுச்சேரி, டெல்லி ஆகிய மாநிலங்களை இணைக்க வேண்டும் என்றும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரிகளை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details