சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆனந்தகுமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், அலுவலக வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கார் மாயமானதாக, திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர், காரை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருமங்கலம் பகுதியில் இன்று அதிகாலை தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிற்க சொல்லியும், அது நிற்காமல் சென்றது. பின்னர், அந்த காரை துரத்திச் சென்று பிடித்த காவல் துறையினர், அதில் இருந்த மூன்று நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.