தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு! - பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல்

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விரும்பும் கல்லூரிகளின் பட்டியலை அக்டோபர் 22ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

anna university
anna university

By

Published : Oct 21, 2021, 3:21 PM IST

சென்னை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் நான்கு சுற்றுகள் கொண்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு மூலம் 89 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து துணை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் 19ஆம் தேதி மாலை வரை பெறப்பட்டன. மொத்தம் 9 ஆயிரத்து 455 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (அக்.21) காலை வெளியிடப்பட்டது. மாணவர்கள் நாளை (அக்.22) மாலை 5 மணி வரை தாங்கள் விரும்பும் கல்லூரிகளின் பெயர், பாடப்பிரிவை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் இந்த மாணவர்களுக்கு அக்டோபர் 23ஆம் தேதி தற்காலிக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளும், அக்டோபர் 24ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பம் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details