இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறப்பு ஆசிரியர் பணியிடங்களில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர்களுக்கான எழுத்துத் தேர்வு 2017ஆம் ஆண்டு செப்.23ஆம் தேதி நடத்தப்பட்டது.
எழுத்துத் தேர்வு முடிவுகள் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தேர்ச்சிப் பெற்றவர்களின் பட்டியல் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.