தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு - சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் என்ன என்பது குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு
சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் தாக்கமும் ஆய்வறிக்கை வெளியீடு

By

Published : Apr 3, 2021, 5:08 PM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்களைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பையும் அதன் தாக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தி "TamilNadu Environmental Report Card 2021" என்கிற அறிக்கையை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தயாரித்துள்ளது.

இதுகுறித்து, சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானத் ஜெயராமன் கூறுகையில், "காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களில் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள எதிர் நிலைப்பாடு மற்றும் தொழிற்சாலைகளைவிட விவசாயத்தையே முக்கியமாக நினைப்பது, அரசியல் கட்சிகளின் அணுகுமுறையில் மாற்றம் உண்டாகியிருப்பதைக் காட்டுகிறது. தொழிற்சாலைகளைவிட விவசாயத்தைத்தான் தமிழ் அடையாளமாக வரையறுப்பதையும் பார்க்க முடிகிறது.

மேலும், காலநிலை மாற்றத்தினால் அதிகரித்து வரும் வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள், மணல் கொள்ளை, குடிநீர் தட்டுப்பாடு, மாசு பாதிப்பு போன்ற மனித சமூகத்தால் உண்டாகிய பிரச்சினைகள் உலகம் முழுக்கப் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது. தமிழ்நாட்டிலும் இது போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கக் கூடியதுதான்.

குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற பிரச்சினைகள் தமிழ்நாட்டில் மிகவும் அதிகரித்துள்ளது. புயல்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்துள்ளது. அரசின் அலட்சியப் போக்குகளில் வெள்ளப் பாதிப்புகளும் அரங்கேறின.

இதுமட்டுமல்லாமல், இலாப வெறிக்கு மணல் சூறையாடப்படுவதால் நிலத்தடி நீர் மட்ட பாதிப்பு, மீத்தேன் போன்ற திட்டங்களால் டெல்டா பகுதிகளில் பாதிப்பு, கூடங்குளம் அணு உலைப் போராட்டங்கள், சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு காடுகள், மலைகள் அழிப்பு, விவசாய நிலங்கள் கையகப்படுத்துதல், நியூட்ரினோ திட்டம், சென்னையை வெள்ள அபாயத்தில் தள்ளப்போகும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு மக்கள் போராட்டங்களையும் மீறி அரசு இத்திட்டங்களை செயல்படுத்தவே முயல்வதை இந்த ஆய்வறிக்கை மூலம் அறிய முடிகிறது'' என்று கூறினார்.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் கூறியதாவது,"தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைமைகள் இன்னும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அதற்கு ஆதாரமாக இந்த ஆண்டு தேர்தல் அறிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கட்சிகள் யாரும் காலநிலை மாற்றம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாததைக் கூறலாம். பொதுமக்களும் சில சமூக செயல்பாட்டு அமைப்புகளும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், இன்னும்கூட கருத்து ஒருமித்த செயல்பாடுகள் முன்னெடுப்பதில் குறைபாடுகள் உள்ளன'' என்று கூறினார்.

இந்த ஆய்வறிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள், அதன் பாதிப்புகள், மக்கள் போராட்டங்கள், அதற்காக தொடரப்பட்ட வழக்குகள் அரசியல் கட்சியின் நிலைப்பாடுகள், அரசின் செயல் திட்டங்கள் போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், "இந்தத் தேர்தலில் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சினைகள் முக்கிய பேசு பொருளாக அமைந்துள்ளன. கூடங்குளம் முதல் காட்டுப்பள்ளி வரை திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வாடிக்கையாகி விட்டன.

இது ஒரு ஆரம்பம்தான். இன்னும் தீவிரமான செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் வரும் காலங்களில் முன்னெடுக்கும். மேலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், அதற்கான விதையாக அமைந்துள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி

ABOUT THE AUTHOR

...view details